2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணிகள் விவகாரம் குறித்து ஐ.நா அதிகாரியிடம் எடுத்துரைப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் படையினர் மற்றும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் என்ற போர்வையில் மேலும் காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி உள்ளிட்டவை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி ரிட்ஸு நெக்கனிடம் எடுத்துக்கூறியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதி ரிட்ஸு நெக்கனுக்கும் மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, திருகோணமலையிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்றது.  

இச்சந்திப்பில் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

கடந்த மார்ச் 20ஆம் திகதி இலங்கைக்கான பிரதிநிதியாக ரிட்ஸு நெக்கன் பதவியேற்ற பின்னர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.  

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை பற்றி முதலமைச்சர் எடுத்துரைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .