2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அவருக்கு காதல் இவருக்கு இல்லை’

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷவின் மீது விமல் வீரவன்ச அன்பு செலுத்தும் அளவுக்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்கு விமல் மீது அன்பு இல்லை என்பது தெரிந்துவிட்டதாகவும், அவ்வாறு அன்பு வைத்திருந்தால், தனக்காக உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு விமல் முகங்கொடுக்க நேரிட்டிருக்காது என, ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, நேற்றுத் (29) தெரிவித்தார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.  

ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால் நாங்கள் அதற்கு சவால் விடுக்க மாட்டோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பான வரலாறு எமக்கு தெரியும். 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாளில், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி கேட்டோம்.

அன்றைய சபாநாயகர் வி.ஜே.மு.லொக்கு பண்டார, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்படாது என்று கூறினார். அவர் அவ்வாறு கூறிய நேரத்தில், ரணில் விக்கிரமசிங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்திருந்தார்.

எனவே, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அது தொடர்பில் நாங்கள் ஆச்சரிமைடைய போவதில்லை. எனினும், எமக்குக் கிடைத்த தகவலின்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தாமதமாகியுள்ளதாகத் தெரிகின்றது. 

எமது நாட்டில் மோசடிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற அலுவலகத்துக்கு தீ வைத்தல். பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு தீ வைத்தல், சத்தோசவுக்கு தீ வைத்தல் ஆகிவை நடைபெற்றுள்ளன. அதனைபோல, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும் நடக்கலாம். எனவே அவ்வாறான இடங்கள், மற்றும் நபர்களுக்குப் பாதுகாப்புப் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். 

நம் நாட்டில் சட்டமானது, வளவு சொந்தகாரருக்கு ஒரு விதத்திலும் வளவில் வேலை செய்பவருக்கு ஒரு விதத்திலும் செயற்படுகின்றது என்பது விமலுக்கு இப்போது தெரிந்துகொள்ள முடியும். எனினும், திருடனை கைதுசெய்தால், மேலும், திருடர்கள் வெளியே உள்ளார்கள் என்று அந்தத் திருடனால் வாதிட முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .