2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிபாரிசுகளை ஆராய அமைச்சரவை உப-குழு

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்குச் சலுகை வழங்குவது தொடர்பான குழுவின் சிபாரிசுகளை ஆராய்வதற்கு அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்​கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில், பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் தகவல்கள் தேடியறிவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, ஜனாதிபதி செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் பத்திரிகை விளம்பரம் ஒன்றின் மூலம் குறித்த ஊடகவியலாளர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கோரப்பட்டன.  

முறைப்பாடுகளின் அதனடிப்படையில், பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பான குழுவின் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன. அச்சிபாரிசுகளை மேலும் ஆராய்வதற்கென அமைச்சரவைக்கு தகவல்களை அறிக்கையிடுவதற்காக அமைச்சரவை உப-குழு நியமிக்கப்படவுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கவே அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .