2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுவர்கள் மரணித்தால் நட்டஈடு வழங்கவேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறரின் கவனயீனத்தால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கும் வகையில், சட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (28) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை பத்திரம், நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.  

அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

பிற நபர் ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்கள் படுகின்ற உள்ளார்ந்த கஷ்டங்களை கவனத்தில் கொண்டே இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் சட்டம் ஒன்றை வரைவதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X