சாதனைக்கு மேல் சாதனை
04-04-2017 02:01 PM
Comments - 0       Views - 80

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதுடைய பெகி விட்சன், எட்டாவது முறையாக விண் வெளி ஆய்வு மையத்தில் நடந்தார். இதன் மூலம், விண் வெளிநடை மேற்கொண்ட,  வயதான பெண்மணி என்ற சாதனையையும் அதிக முறை விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையையும், நிகழ்த்தியிருக்கிறார்.

விண் வெளி நிலையத்தில் பழுதைச் சரி செய்வதற்காக, 7 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். இதுவரை, 53 மணி நேரங்கள் 22 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார். அதிகமான நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர்களில், அவர் ஐந்தாவது இடத்திலிருக்கிறார். 2007ஆம் ஆண்டு, முதல் பெண் கமாண்டராக விண்வெளிக்குச் சென்று, வரலாற்றில் முத்திரைப் பதித்திருந்தார்.

அமெரிக்க விண்வெளி வீரர் ஜெஃப் வில்லியம்ஸ், மொத்தம் 534 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததுதான், இதுவரை சாதனையாக இருந்துவருகிறது. இந்த விண்வெளிப் பயணத்தின் மூலம், 500 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் பெகி விட்சன், ஜூன் மாதம் பூமிக்குத் திரும்பும் பொழுது, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற சாதனையையும் படைக்க இருக்கிறார். கடந்த பெப்ரவரி மாதம், தன்னுடைய 57ஆவது பிறந்த நாளை, விண்வெளியில் கொண்டாடிய அவர், நாசாவின் இலட்சியங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பும் திட்டத்தை, தன் வாழ்நாளுக்குள் பார்த்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.

"சாதனைக்கு மேல் சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty