பெண்களுக்கு தட்டுப்பாடு: ரோபோவுடன் திருமணம்
05-04-2017 01:10 PM
Comments - 0       Views - 489

வெகு நாட்களாக தேடியும் திருமணம் செய்துகொள்வதற்காக பெண் ஒருவர் கிடைக்காத காரணத்தினால், நபரொருவர், பெண் ரோபோவைத் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம், சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவிலுள்ள தம்பதியினர், ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதனால், பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை, மிகவும் குறைவடைந்தது.

அப்போது பிறந்த ஆண்கள் மற்றும் பெண்கள், தற்போது வளர்ந்து, திருமண வயதை அடைந்துள்ள நிலையில், ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில், பாரிய சிக்கில் ஏற்பட்டுள்ளதாம். இதனால், பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல், பிரம்மச்சாரியாகவே இருந்து வருகின்றனராம்.

இப்படி பெண் கிடைக்காததால், வாலிபர் ஒருவர் ரோபோ இயந்திரத்தையே, திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

சீனாவைச் சேர்ந்த செங் ஜியா ஜியா (வயது 31) என்ற நபர், ரோபோ பொறியியலாளராக இருக்கின்றார். இவர், பல ரோபோக்கலையும் உருவாக்கியுள்ளார்.

கடந்தாண்டு, இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய, ரோபோ ஒன்றை உருவாக்கினார். அதற்கு, இங் இங் என்று பெயரிட்டார்.

இதன்போதே, செங் ஜியா ஜியா, திருமணத்துக்கான பெண் தேடி வந்தார். அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் உருவாக்கிய பெண் ரோபோவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு, அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு காங்சுகு என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இதில், அவரது தாயார் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுடைய பாரம்பரியப்படி திருமணம் முடிந்ததும், மணப்பெண்ணின் முகத்தை மூடி அவரை மணமகன் தூக்கிச் செல்வது வழக்கம். அதேபோல், ரோபோவின் முகத்தை மூடி, மணமகன் தூக்கிச் சென்றார்.

இந்த ரோபோவின் எடை, 30 கிலோகிராம்  என்றும் இதனால் சில வார்த்தைகளை பேச முடியும், கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லவும் முடியும் என்றும் தெரிவித்துள்ள செங் ஜியா ஜியா, ஆனாலும், திருமண வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட, ரோபோவில், சில மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"பெண்களுக்கு தட்டுப்பாடு: ரோபோவுடன் திருமணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty