புகைத்தலினால் உலகில் பத்தில் ஓர் இறப்புகள்
07-04-2017 12:21 AM
Comments - 0       Views - 20

உலகளாவிய ரீதியில் ஏற்படும் 10 இறப்புகளில் ஒன்று புகைத்தலினாலேயே ஏற்படுவதாக, புதிய ஆராய்சியொன்று வெளிப்படுத்தியுள்ளதோடு, இந்த இறப்புகளில் அரைவாசி, சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யாவிலேயே ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.  

 மேற்குறிப்பிட்ட விடயங்கள், தி லன்செட் எனும் மருத்துவ சஞ்சிகையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.   நோய்களின் பூகோளச் சுமை என்ற குறித்த அறிக்கையானது, 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான 195 நாடுகள், பிராந்தியங்களின் புகைப் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.  

இந்த அறிக்கையானது, 2015ஆம் ஆண்டில், நான்கில் ஓர் ஆண், இருபதில் ஓரு பெண் என, ஒரு பில்லியன் மக்கள் தினமும் புகைபிடிக்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

“சுகாதாரத்தில், புகைபொருட்களின் பாதிப்புகள் குறித்த தெளிவான, ஆதாரத்துக்கு மத்தியிலும், இன்று, உலகிலுள்ள நான்கிலொருவர் தினமும் புகைப்பவராகவே உள்ளார்” என குறித்த சஞ்சிகையின் சிரேஷ்ட ஆசிரியர் இமானுவேலா க்கிடெள் தெரிவித்துள்ளார்.    

"புகைத்தலினால் உலகில் பத்தில் ஓர் இறப்புகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty