நாமல் பெரேரா மீது தாக்குதல்: 12இல் அடையாள அணிவகுப்பு
08-04-2017 12:00 PM
Comments - 0       Views - 16

பேரின்பராஜா திபான்

ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களான முன்னாள் புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறுவரையும், ஏப்ரல் 12ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் அதுவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை (06) உத்தரவிட்டது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊழியராக இருந்த நாமல் பெரேரா மீது, 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியன்று, கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அறுவரும், கொழும்பு குற்றப் பிரிவினரால் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஊடகவியலாளர்களான கீத் நொயர், உபாலி தென்னகோன் ஆகியோரின் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இராணுவ மேஜர் உட்பட புலனாய்வு உத்தியோகத்தர்கள் அறுவரே, மன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட பதில் நீதவான் பிரசாத் சில்வா, அவர்களை 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

"நாமல் பெரேரா மீது தாக்குதல்: 12இல் அடையாள அணிவகுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty