அபான்ஸ் வழங்கும் LG சோலர் படல்கள்
11-04-2017 10:51 PM
Comments - 0       Views - 138

அபான்ஸ் நிறுவனம் கொரியாவின் LG நிறுவனத்துடன் இணைந்து வீடுகளுக்கும், தொழில்முறை தேவைகளுக்குமான சூரிய மின்சக்தி படல்களை விநியோகித்து வருகின்றது. புகழ்பெற்ற அபான்ஸ் நிறுவனம் 35 வருடங்களுக்கு மேலாக உலகின் முன்னணி விற்பனை நாமங்களைக் கொண்ட இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பாவனை உபகரணங்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதோடு, வெவ்வேறான துறைகளில் 45க்கும் அதிகமான நிறுவனங்களை மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றது.  

அபான்ஸ் நிறுவனம் நாடளாவிய ரீதியில் 430க்கும் அதிகமான காட்சியறைகளையும், 20 சேவை நிலையங்களையும் 10 மில்லியனுக்கும் அதிகமான அசைக்க முடியாத வாடிக்கையாளர் வலையமைப்பையும் தன்வசம் கொண்டுள்ளது. இலங்கையில் தனது வணிக சாம்ராஜ்யத்தை நாளுக்கு நாள் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் அபான்ஸ் நிறுவனம் தனித்துவமான அணுகு முறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் முன்னோடி பெரு நிறுவனமாகும்.  

அபான்ஸ் வழங்கும் PV சோலர் படல்கள் உயர் தரமானவை என்பதனை உறுதிசெய்திடக்கூடிய பல உதாரணங்கள் உள்ளன. தற்போதைய விற்பனைச் சந்தைகளில் காணப்படும் அதியுயர் செயல்திறன் கொண்ட LG சோலர் படல்கள் கொரியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றவையாகும்.

அபான்ஸ் வழங்கும் LG சோலர் படல்களில் ஜேர்மனியின் உலகப் புகழ்பெற்ற S6MA இன்வேர்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன அதேபோல் இந்தச் சோலார் பேனல்களுக்கு ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் சர்ஜ் புரோடெக்டர்ஸ், DC கேபிள்கள் மற்றும் Enclousers மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் சோலர் படல்களை கொள்ளவனவு செய்வதாக இருந்தால் கொள்வனவு செய்யும் நிறுவனத்தின் நிலைப்புத்தன்மை மற்றும் நம்பிக்கை தொடர்பாக கருத்திற் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். அபான்ஸ் சோலர் படல்களின் செயல்திறனுக்கு 25 ஆண்டுகள் நீடித்த உத்தரவாதம் வழங்கப்படுவதோடு, வணிகத் துறையில் பல தசாப்த்தங்களாக அசைக்க முடியாத நம்பிக்கையை வென்றுள்ள அபான்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்படும் உத்தரவாதம் ஒப்பிட முடியாத ஒன்றாகும்.  

"அபான்ஸ் வழங்கும் LG சோலர் படல்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty