சிறந்த வர்த்தக INSEE சீமெந்தின் சங்ஸ்தா தெரிவு
11-04-2017 06:00 PM
Comments - 0       Views - 42

SLIM- நீல்சன் மக்கள் விருதுகள் 2017 நிகழ்வில், நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரிவில் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக சங்ஸ்தா சீமெந்து தெரிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக இவ்வாறு சங்ஸ்தா சீமெந்து தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.  
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM- நீல்சன் மக்கள் விருதுகள், கடந்த ஆண்டில் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்றுள்ள வர்த்தக நாமங்கள், நபர்கள் மற்றும் இதர பிரபல அம்சங்களான திரைப்படங்கள், விளம்பரங்கள், பாடல் மற்றும் மேலும் பல அம்சங்கள் குறித்து கண்டறியும் ஒரே கருத்துக்கணிப்பு முறையிலமைந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

சகல வெற்றியாளர்களும் பொது மக்களின் வாக்குகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், நாடு தழுவிய ரீதியில் இந்தக் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. 15 – 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தக் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன் மூலமாக, உள்நாட்டு கூட்டாண்மை நாட்காட்டியில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக SLIM- நீல்சன் மக்கள் விருதுகள் அமைந்துள்ளது.  

INSEE சீமெந்தின் வணிக பணிப்பாளர் ஜனக வீரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், இந்த வெற்றியின் மூலமாகக் கிடைக்கும் வர்த்தக நாமக்கீர்த்தியை நாம் அறிவோம். நுகர்வோர் தேவைகளைப் பின்பற்றல், எமது வர்த்தக நாமங்களினூடாக நுகர்வோருக்கு பெறுமதி சேர்த்தல் போன்றன எமது நோக்காகும். தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக சங்ஸ்தா இந்த விருதைப் பெற்றுக்கொள்ள மக்கள் வழங்கிய ஆணைக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன், தொடர்ந்தும் நாம் புத்தாக்கமான தயாரிப்புகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க நாம் செயலாற்றுவோம்” என்றார்.   

" சிறந்த வர்த்தக INSEE சீமெந்தின் சங்ஸ்தா தெரிவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty