கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு
17-04-2017 11:16 AM
Comments - 0       Views - 34

கல்வியூட்டல் தங்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றது என்கின்ற ஓர் எண்ணம் ஏற்படுவதாலேயே இளம் சிறார்கள், கல்வியில் நாட்டம் இல்லாமலும் வெறுப்பான மனநிலைக்கும் உள்ளாகின்றார்கள். 

இளம் மாணவர்கள் உரிய முறையில் கல்வி பயிலாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. வீட்டில் வறுமை நிலை, தாய் தகப்பனாரின் அசமந்த குணம், சதா வீட்டில் சண்டை சச்சரவுகள், குடும்பத் தலைவனின் மதுப்பழக்கம் எனப் பல காரணங்களினால் பிள்ளைகளின் கல்வி மீதான ஆர்வம் தடைப்படுகின்றது.

கல்விகற்றல் என்றால் பாடசாலையில் தண்டனை வழங்கும் நிகழ்வு எனப் பிள்ளைகள் கருதும் நிலை ஏற்படலாகாது. கல்வி கற்பிக்கும் விடயத்தில் பிள்ளைகளுக்கு தண்டனைகள் வழங்குதலாகாது. நவீன கல்விச் சிந்தனைகள் தண்டனை வழங்கும் முறையைக் கடைப்பிடித்தலாகாது என்று வலியுறுத்துகின்றன. 

கல்வி கற்கும்போது அவர்களின் மனஇயல்பு பாதிக்காத வகையில் நடந்து கொள்ளல் வேண்டும். கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு என்ற உணர்வையூட்டுக. 

 

வாழ்வியல் தரிசனம் 17/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

"கல்வி கற்றல் ஒரு சுவாரஷ்யமான நிகழ்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty