மஹரகமையில் கூல் பிளனட் புதிய காட்சியறை
17-04-2017 04:39 PM
Comments - 0       Views - 82

கூல் பிளனட் (Cool Planet) மஹரகம நகரத்தில் அதன் புதியக் காட்சியறையை திறந்து வைத்துள்ளது. ஏனைய காட்சியறைகளைப் போன்றே இப்புதியக் கிளையிலும் வசந்தகாலம் / கோடைக்காலம் 2017 தெரிவுகளிலிருந்து நவநாகரீக போக்குகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.  

“ஏப்ரல் மாதமானது, வளம் மற்றும் சந்தோஷத்துக்கான காலமாகும். கூல் பிளனட்டிலுள்ள நாம், புது வருடத்தினை எமது கருவான - புதிய ஆரம்பம் (New Beginning) - உடன் மஹரகமையில் புதிய கிளையினை திறந்து வைத்து கொண்டாடுவதையிட்டு மகிழ்வடைகிறோம். புதுப்பிக்கப்பட்ட சக்தியுடனும் சிறந்த எதிர்காலத்துடனும், இலங்கையின் முன்னணி நவநாகரீக வர்த்தக நிறுவனமான கூல் பிளனட், தனது வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை சந்திக்கக்கூடிய பொருட்களை வழங்குகின்றது” என கூல் பிளனட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரிஸ்வி தாஹா தெரிவித்தார்.  

இல. 171, ஹைலெவல் வீதி, மஹரகமையில் அமைந்துள்ள கூல் பிளனட்டின் 7ஆவது கிளை, தாராளமான இடவசதிகளைக் கொண்டுள்ளது. பரந்த வாகனத்தரிப்பிடத்தையும் கொண்டுள்ளதுடன், ஆரம்பத்தில் 13,000 சதுர அடியாக உள்ளதுடன், வரும் காலங்களில் விஸ்தரிக்கப்ப்படவுள்ளது.  

தொடர்ந்து வளர்ந்து வரும் இந்நிறுவனமானது, சர்வதேச நாகரீகத் தெரிவுகளை ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு வழங்குகின்றது. அவற்றுடன், காலணிகள், கைப்பைகள், நாகரீக அணிகலன்கள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது.    

"மஹரகமையில் கூல் பிளனட் புதிய காட்சியறை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty