ரயிலுடன் மோதியது முச்சக்கர வண்டி; இளைஞன் பலி
18-04-2017 04:16 PM
Comments - 0       Views - 6

ஹிக்கடுவை, நாரிகம ரயில் கடவையில் வைத்து முச்சக்கர வண்டி, ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி  உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலிலேயே, முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, ஹிக்கடுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை பிரதேச்தைச் சேரந்த 23 வயதுடைய இளைஞனே, இந்த விபத்தில்  உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"ரயிலுடன் மோதியது முச்சக்கர வண்டி; இளைஞன் பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty