மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைக்க வேண்டும்
18-04-2017 04:44 PM
Comments - 0       Views - 16

மாணவர்களுக்கு உள்ள பல பிரச்சினைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் தரப்படும் வீட்டுவேலைகளை (பாடம் சம்பந்தமானது)மாணவர்கள் செய்யாது விடின், உடனே ஆசிரியர்கள் அவர்கள் மனம் போனபடி, திட்டித் தீர்த்தலாகாது.

தங்கள் வீட்டுப் பிரச்சினைகள் எல்லாவற்றையும் சின்னஞ் சிறுவர்கள் சொல்லத் தெரியாவிட்டாலும் கூட அதனை உணர்ந்து மனவேதனைப் படலாம்.

வீட்டுச் சூழல் மாணவர்களைப் பெரிதும் பாதிப்படைய வைக்கின்றது. 

மேலும், தற்போது பாடசாலையில் பயிலும் மாணவர்கள் தீயவர்களுடன் வெளியே பழகுவதால், எல்லை மீறிய தீய காரியங்களில் ஈடுபடுவதை அறிகின்றோம்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாகப் பிறர் கூறுவதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைத்தல் பெற்றோர், ஆசிரியர்களின் சிந்தையில் தங்கியுள்ளது. 

வாழ்வியல் தரிசனம் 18/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"மாணவச் சிற்பங்களை அற்புதமாக வடிவமைக்க வேண்டும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty