2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரிடம் விசாரணை

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், ஜனாதிபதி செயலகத்தில் இருந்த பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (18) அறிவித்தனர்.  

2012ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதி வரை, அப்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புக்கான பிரிவினர் கையெழுத்திடும் பதிவுப் புத்தகத்தின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு, செலோடேப்பினால் ஒட்டப்பட்டுள்ளன என்று, சீ.ஐ.டியினரின் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.  2011ஆம் ஆண்டு டிசெம்பர் முதல் 2012ஆம் ஆண்டு மே மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இது தெரியவந்துள்ளது என்றும் சீ.ஐ.டியினர் குறிப்பிட்டனர்.  

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில், நேற்று (18) எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு மருத்துவ சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் விசாரணையும் அன்றையதினம் நிறைவடையும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க அறிவித்தார்.  

அத்துடன், கொலை நடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான விசாரணைகள், 2012 ஆம் ஆண்டு மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், வசீம் தாஜுதீனின் தானியங்கி அட்டை மற்றும் கடனட்டை மூலம் பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு, மேலதிக அவகாசம் தேவைப்படுவதாகவும் அறிவித்தார்.  

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருப்பதை அவருடைய சட்டத்தரணி, நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  

இந்நிலையில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கவின் விளக்கமறியலும் ஏப்ரல் 27 வரை நீடிக்கப்பட்டது.   

வசீம் தாஜுதீன், நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X