'பாகுபலி 2' தணிக்கை தகவல்
19-04-2017 10:17 AM
Comments - 0       Views - 448

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் “பாகுபலி 2” திரைப்படம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தை பார்த்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தணிக்கை மற்றும் நீளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

“பாகுபலி 2” திரைப்படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் “பாகுபலி 2” திரைப்படம் 170 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடுகின்றது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் பெரிய திரைப்படமாக இருந்தாலும் பார்வையாளர்கள் சலிப்படைய  வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் “பாகுபலி” திரைப்படம் கிட்டத்தட்ட இதே ரன்னிங் டைம் அதாவது 159 நிமிடங்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

“பாகுபலி”யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற மர்மம் இந்த 170 நிமிடங்களில் எத்தனையாவது நிமிடத்தில் தெரிய வரும் என்பதை அறிந்து கொள்ள இரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இந்தியாவில் மட்டும் சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் அமெரிக்கா, கனடாவில் 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும்  உலகின் மற்ற பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் திரைப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

“பாகுபலி 2” திரைப்படம் 28ஆம் திகதி வருவதால் இந்த வாரமும், அடுத்த வாரம் அதிக திரைப்படங்கள் வெளியாகவில்லை. அனைவருமே மே மாதத்துக்குப் பிறகு தங்களது வெளியீட்டை தள்ளிப் போட்டு விட்டார்கள்.

உலகம் முழுவதும் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானாலும் கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகுமா என்பது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. “பாகுபலி 2” திரைப்படத்துக்கு கன்னட அமைப்புகள் திடீரென பிரச்சனை செய்வதை தயாரிப்பு தரப்பில் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.

பிரச்சினையை தீர்த்து வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்களாம். கர்நாடகாவில் “பாகுபலி 2” வெளியாகவில்லை என்றால் சுமார்  இந்திய ரூபாய் 50 கோடி வரை நட்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என சொல்லப்படுகிறது.

"'பாகுபலி 2' தணிக்கை தகவல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty