மகிழ்ச்சிகளைக் கோட்டை விடலாமா?
19-04-2017 02:37 PM
Comments - 0       Views - 30

காலநிலை மாற்றங்கள் தங்களுக்கு ஒத்துவராவிட்டால் மேலைத்தேச மக்களில் பலர், ஓய்வு எடுக்கும் பொருட்டும், புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டும், உடனே வெளிநாடுகளுக்கோ அல்லது தங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கோ சென்று, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். 

ஆனால், நம்மவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு, அசைவதேயில்லை. உழைக்கும் பணத்தை செலவு செய்யவும் பிரியப்படுவதில்லை. சிக்கனமாக வாழவேண்டும் என்பதற்காக புது அனுபவங்கள் மகிழ்ச்சிகளைக் கோட்டை விடலாமா?

நியாயபூர்வமான களிப்பினை உருவாக்கினால் எமது ஆன்மாவும் புளகாங்கிதம் அடைகின்றது. பறவைகள், விலங்குகள் கூட தங்களுக்கு ஏற்றால்போல் இடம்பெயரும். மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு வந்துசேரும். வெளி உலகைச் சுற்றிப் பாருங்கள்.  

வாழ்வியல் தரிசனம் 19/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"மகிழ்ச்சிகளைக் கோட்டை விடலாமா?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty