சண்டையால் தம்பதி பலி
19-04-2017 03:18 PM
Comments - 0       Views - 31

தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து தானும் தீக்குளித்து உயிரழந்த சம்பவம் ஒன்று, காலி - அக்மீமன - பின்னந்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாக ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கூரிய கத்தி ஒன்றினால் குத்திக் கொலை செய்து, பின்னர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.

இதையடுத்து இருவரும் காலி - கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

"சண்டையால் தம்பதி பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty