'உரிமைகளை வென்றெடுப்போம்'
20-04-2017 02:05 PM
Comments - 0       Views - 71

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை முன்வைத்தது, 'உரிமைகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப்பொருளில், நீர்கொழும்பு நகரில் இன்று (20) காலை ஒருநாள் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் , நீர்கொழும்பு நகர மத்தியில் ஸ்டேசன் வீதி அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

எதிர்ப்பு நடவடிக்கையின் போது, சகல காணாமலாக்கள்களையும் வெளிப்படுத்தல் வேண்டும், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட சகல அடக்குமுறை சட்டங்களையும் இரத்துச் செய்தல் வேண்டும் மற்றும் மீதொட்டமுல்லயில் குப்பை மேடு சரிந்ததினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும் உட்பட  பல்வேறு உரிமைகள் தொடர்பாக அங்கு வலியுறுத்தப்பட்டது.

(படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)

"'உரிமைகளை வென்றெடுப்போம்' " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty