மனித விழுமியங்களுக்கான நடைபவனி
20-04-2017 02:57 PM
Comments - 0       Views - 7

‘மனித விழுமியங்களுக்கான நடைபவனி’ எனும் தொனிப்பொருளிலான நடைபவனி, கொழும்பு 7, தாமரைத் தடாகத்துக்கு முன்பாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நடைபவனி, காலிமுகத்திடல் வரை செல்லவுள்ளது.

மனிதவிழுமியங்கள் பற்றியஅறிவூட்டலை மேம்படுத்துவதற்கும் மனிதத்துவத்தின் வளர்ச்சிக்காக தனிமனிதனாகவும், கூட்டாகவும் பொறுப்புக் கூறலை முன்னேற்றுவதற்குமாக, இந்நடைபவனியானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்நடைபவனியானது, எவ்வகையிலும் நிதிசேகரிக்கும் நோக்கமின்றி, பங்குபற்றும் ஒவ்வொருவரும் ஏதோவொரு விழுமியத்தைக்கொள்வதென உறுதிசெய்வதன் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதுடன், இது ஒரு மனிதநேயத்துக்கான நிகழ்வாதலால், இம்மனித விழுமியங்களானது, சமுதாய கடப்பாட்டுக்கான முன்னேற்றத்தின் முதற்படியாக அமைகின்றது என, ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

"மனித விழுமியங்களுக்கான நடைபவனி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty