வெளிநாட்டு மதுபானங்களுடன் மூவர் கைது
20-04-2017 02:58 PM
Comments - 0       Views - 7

கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில், வெளிநாட்டு மதுபான போத்தல் 182 உடன் 3 நபர்கள், புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கடற்படையினர் மற்றும் ​ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தின் ஊடாக இந்த மதுபான போத்தல்களைக் கொண்டுச்சென்ற போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

​கைதுசெய்யப்பட்ட நபர்களையும் மோட்டார் வாகனம், மதுபானப் போத்தல் என்பவற்றையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

"வெளிநாட்டு மதுபானங்களுடன் மூவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty