கொடுக்கும் கரங்கள் வற்றாது
20-04-2017 03:22 PM
Comments - 0       Views - 63

கொடுக்கும் கரங்கள் வற்றாது, பிறர் பொருட்களை எடுக்கும் அல்லது வாங்கும் நபர்களுக்கு, மனம் சுரக்கும் எண்ணம் வராது. நான் அறிந்த தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர், நூற்றுக் கணக்கான சிறுவர், வயோதிபர்களைப் பராமரித்து வருகிறார். இவர், வவுனியாவில் இப்பணியை ஆற்றிவரும் அற்புதாமான ஆன்மா.

இவர் என்னிடம் ஒருமுறை சொன்னார் “சில சமயங்களில் எனக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. ஆனால், ஒரு வேளையும் மனம் சோர்வதுமில்லை. அடுத்த கணமே, யாரோ அன்பர்கள் வலிந்து வந்து, நிதியுதவிகளைச் செய்வது எனக்கும் பிரமிப்பைத் தரும்” என்றார். 

இறைவன் ஒருவரையும் கைவிடுவதே இல்லை. அவன், மனித வடிவில் தர்மவான்களை அனுப்பியபடியே இருப்பான். கொடை செய்தால் இடர்களையப்படும். 

 

வாழ்வியல் தரிசனம் 20/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"கொடுக்கும் கரங்கள் வற்றாது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty