சிறைத் தண்டனையிலிருந்து தப்புகின்றார் ‘அஹொக்’
20-04-2017 09:57 PM
Comments - 0       Views - 24

நேற்று  (19) இடம்பெற்ற,  இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநருக்கான தேர்தலில், முன்னாள் ஆளுநரான “அஹொக்” என்றழைக்கப்படும் பசுகி டஹாஜா புரனமா தோல்வியடைந்த மறுதினமான இன்று (20), மதநிந்தனை என்று கூறப்படும் குற்றச்சாட்டில், நன்நடத்தையை மட்டுமே அரச வழக்குத் தொடருநர்கள் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, சிறைத்தண்டனையிலிருந்து அஹொக் தப்பிக்கவுள்ளார்.   

“அஹொக்” மீதான விசாரணையில், இரண்டு ஆண்டுகள் நன்நடத்தைக்காலமும், இக்காலத்தில் அஹொக் குற்றம் புரிந்தால், ஓராண்டு சிறைத்தண்டனையுமே பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு சிறை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டதையும் விட மிகக் குறைவாகவே இத்தண்டனை இருக்கிறது.  

"சிறைத் தண்டனையிலிருந்து தப்புகின்றார் ‘அஹொக்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty