‘அசாட்டின் படைகளிடம் இரசாயன ஆயுதங்கள்’
20-04-2017 10:39 PM
Comments - 0       Views - 28

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலொன்றில், ஏறத்தாழ 90 பேர் கொல்லப்பட்ட இரண்டு வாரத்தில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டின் படைகளிடம் சில தொன் இரசாயன ஆயுதங்கள் இன்னும் காணப்படுவதாகத், தாம் நம்புவதாக, இஸ்‌ரேலிய இராணுவம், நேற்று  (19) தெரிவித்துள்ளது.

அசாட்டின் படைகளின் கைகளில், சில தொன் இரசாயன ஆயுதங்கள் இன்னும் காணப்படுவதாக இஸ்‌ரேலின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   
இதேவேளை, சரின் அல்லது அது போன்ற தடை செய்யப்பட்ட நச்சுப் பதார்த்தம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இம்மாதம் நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக, இரசாயன ஆயுதங்களை தடைசெய்யும் நிறுவனம், நேற்று தெரிவித்துள்ளது.   

இந்நிலையில், அசாட்டின் இராணுவமே தாக்குதலை மேற்கொண்டதான ஆதாரத்தை, பிரான்ஸ் புலனாய்வு சேவைகள், எதிர்வரும் நாட்களில் வழங்கும் என பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சரான ஜோ மக் ஏஹு தெரிவித்துள்ளார்.    

"‘அசாட்டின் படைகளிடம் இரசாயன ஆயுதங்கள்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty