மணிக்கூட்டுக் கோபுர பதாகைகளால் மக்கள் கவலை
21-04-2017 11:47 AM
Comments - 0       Views - 55

வி.சுகிர்தகுமார் 

அம்பாறை, அக்கரைப்பற்று மத்திய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தின் நாலாப் புறமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளினால், தமிழ், சிங்கள மக்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாழும் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில், தனியாக ஓர் இனத்தை அடையாளப்படுத்தும்; இடங்கள் மாத்திரம் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையானது மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று காட்சிப்படுத்தக்ககூடிய பொருத்தமான இடங்கள் உள்ளபோதும் அவை உள்வாங்கப்படாமல் இருப்பது,

 அதேவேளை, கடந்த காலத்தில் புனரமைக்கப்படாமல் இருந்த இம்மணிக் கூட்டுக்கோபுரத்தை அகற்ற சிலர் முற்பட்டதாகவும் ஆயினும் பலரது முயற்சியால் அது கைவிடப்பட்டதாகவும் பல சமூகு அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.

அது மாத்திரமன்றி, அண்மையிலேயே இராணுவத்தினரின் முயற்சியால் இக்கோபுரம் புனரமைக்கபட்டதையும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் இன நல்லுறவுக்;ப்கு பங்கம் விளைவிக்கலாம் எனவும் சம்மந்தப்பட்டவர்கள் மீள் பரிசீலனை செய்து பொருத்தமான பிரதேசங்களை இப்பதாதையினுள் உள்ளடக்க வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 

"மணிக்கூட்டுக் கோபுர பதாகைகளால் மக்கள் கவலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty