டிக்கோயா வைத்தியசாலை, இந்திய பிரதமரால் திறந்து வைக்க ஏற்பாடு
21-04-2017 11:47 AM
Comments - 0       Views - 60

-மு. இராமச்சந்திரன்

டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை இந்திய பிரதமர் நரேந்திரமோடி மே மாதம் 12ஆம் திகதி திறந்து வைக்க உள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று (20) மாலை நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் மலையக புதிய. கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள,கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் உட்பட இந்தியாவிலிருந்து வருகைத்தந்த விசேட குழுவினரும் கலந்துகொண்டனர்.

அதாவது, வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு வருகைத் தரும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால், இந்திய அரசாங்கத்தின் 500 மில்லியன் நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது நோர்வுட் விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெறவுள்ள விசே கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

"டிக்கோயா வைத்தியசாலை, இந்திய பிரதமரால் திறந்து வைக்க ஏற்பாடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty