குப்பைக்கு எதிர்த்தால் குற்றம்: வர்த்தமானி இணைப்பு
21-04-2017 12:19 PM
Comments - 0       Views - 341

சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் திண்மக்கழிவுகளை அகற்றும் சேவையானது. அதியாவசிய சேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிப்பட்டுள்ளது.

அவ்வாறு கழிவுகளை அகற்றும்போது, அதற்கு எதிராக செயற்பட்டால் அது குற்றமாகும் என்றும் அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளின் பிரகாரம், திண்மக்கழிவுகளை அகற்றல், போக்குவரத்து, தற்காலிகமாக களஞ்சியப்படுத்தல், ஆகியவற்றை தடுத்தல், தாமதப்படுத்தல் அல்லது இடையூறு ஏற்படுத்தல் ஆகியவை குற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பட்ட செயற்பாடுகளுக்கு, அழுத்தம் கொடுத்தல், மக்களை தூண்டிவிடுதல் அல்லது ஏனைய வழிமுறைகளின் ஊடாக திண்மக்கழிவுகளை அகற்றும் சேவைகளுக்கு இடையூகளை விளைவித்தல் அவற்றுக்காக எழுத்துமூலமாகவே அல்லது வாய்வழியாகவே அழுத்தம் கொடுத்தல் தண்டனைக்கு உரிய குற்றமாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட குற்றங்களை செய்கின்ற, எந்தவொரு நபராக இருந்தாலும் அவரை பிடியாணை இன்றி, கைதுசெய்வதற்கு, பொலிஸாரிக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(வர்த்தமானியை தௌிவாக பார்ப்பதற்கு புகைப்படத்தை அழுத்துங்கள்)

"குப்பைக்கு எதிர்த்தால் குற்றம்: வர்த்தமானி இணைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty