வௌிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்தவர் கைது
21-04-2017 12:41 PM
Comments - 0       Views - 96

பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக, சீசெல்ஷ் நாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, நபர்களிடம் பண மோசடி செய்த,  நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றை நடத்திச் சென்ற நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட இந்த நிறுவனம் ஊடாக தனி நபர்களிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

2016 ஓகஸ்ட் மாதம் முதல் 2017 பெப்ரவரி மாதம் வரை நடத்திச் செல்லப்பட்ட இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக   வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதனையடுத்து, சந்தேகநபர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மகர மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

"வௌிநாட்டு வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்தவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty