தங்கச் சங்கிலியை பிடுங்கிய நபர் கைது
21-04-2017 01:24 PM
Comments - 0       Views - 35

-எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பகுதியில் கடைக்குச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்ற சந்தேக நபரை நேற்று (20) அக்கோபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 19 வயதுடைய கந்நலாய், ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர், ஒன்றரை பவுன் நிறைவுடைய தங்கச் சங்கிலியை பிடுங்கிச் செல்லும் போது, பிரதேச இளைஞர்களின் உதவியுடன் துரத்தி பிடிக்கப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை, கந்தலாய் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) முன்னிலைப்படுத்த அக்கோபுர பொலிஸாரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

"தங்கச் சங்கிலியை பிடுங்கிய நபர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty