கல்வி மேம்பாட்டுக்கு 10 மில்லியன் ஒதுக்கீடு
21-04-2017 02:08 PM
Comments - 0       Views - 39

-தீசான் அஹமட்
தேசிய மட்டத்தில் கல்வி தொடர்பாக எடுத்துவரும் முன்னெடுப்புகள் தொடர்பான, வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்ட நடவடிக்கையாக கிண்ணியா, மூதூர் கல்வி வலய பாடசாலைகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கிண்ணியா வலயத்துக்கும் 5 மில்லியன் ரூபாவும் மூதூர் வலயத்துக்கு 5 மில்லியன் ரூபாவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒதுக்கியுள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் வலயக்கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.

 

"கல்வி மேம்பாட்டுக்கு 10 மில்லியன் ஒதுக்கீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty