2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

30,000 கிலோகிராம் வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம், இந்த வருடம் 30 ஆயிரம் கிலோகிராம் வெல்லம் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ் துரைசிங்கம்  தெரிவித்துள்ளார்.

பனை வெல்லங்களை மக்கள் அதிகளவில் கொள்வனவு செய்து வருவதாகவும் கடந்த வருடம் அதிகூடிய வெல்லங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ததாகவும் அவர் கூறினார்.

தற்போது மக்கள் மத்தியில்  நீரிழிவு என்கின்ற நோய் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால், அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக பனை வெல்லங்களை மக்கள் அதிகப்படியாக கொள்வனவு செய்வதாகவும், உள்ளுர் மக்கள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் வாழும் மக்களும் வெல்லங்களை கொள்வனவு செய்வதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .