மயங்கி விழுந்து கர்ப்பிணி மரணம்
21-04-2017 02:57 PM
Comments - 0       Views - 99

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில், சமுர்த்திக் கூட்டத்துக்குச் சென்ற மூன்று பிள்ளைகளது தாயான கர்ப்பிணி பெண், சடுதியாக மயங்கி  விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.15 மணியளவில் மயக்கமடைந்த அவரை, உறவினர்களும் அயலவர்களும் வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிரிழந்துவிட்டார்.

குறித்த  பெண் கர்ப்பமாக இருந்தமையால்,  விசேட வைத்திய நிபுணரின பிரேத பரிசோதனைக்காக சடலம், அநுராதபுர வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதற்கான போக்குவரவுச் செலவுகளை சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"மயங்கி விழுந்து கர்ப்பிணி மரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty