சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
21-04-2017 02:59 PM
Comments - 0       Views - 25

எம்.யூ.எம். சனூன்

கொழும்பு பல்கலைக்கழத்தின் ஐ.எச்.ஆர்.ஏ. பிரிவினால் நடத்தப்பட்ட சேர்ட் கேப் பாடநெறியை மேற்கொண்ட புத்தளம் ஐ.சொப்ட் கல்லூரியின் 35 மாணவர்கள் அந்த பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள ஐ.சொப்ட் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவருமான கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

கௌரவ அதிதிகளாக அமேசன் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், சீ.பீ.எஸ்.கல்லூரியின் ஸ்தாபகருமான இல்ஹாம் மரிக்கார், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் பிரதான திட்டமிடல் அதிகாரி  ஸ்ரீ சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

"சான்றிதழ்கள் வழங்கி வைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty