கடவைக் காப்பாளர்கள் கடமைக்குத் திரும்பினர்
21-04-2017 03:33 PM
Comments - 0       Views - 28

எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாதுகாப்பற்ற  ரயில் கடவைகளில், கடவைக் காப்பாளர்களாக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஊழியர்கள், இரண்டுவாரகால பணிப்பகிஸ்கரிப்பின் பின்பு, இன்று (21) கடமைக்குச் சமுகமளித்தனர்.

பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை தாங்கள் முன்னெடுத்துள்ள போதிலும், எதுவித தீர்மானமும் எட்டப்படாத நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு கடமைக்குத் திரும்புவதாக மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவைக் காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தினால், கடந்த 4 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில், 24 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் பணியாற்றுவதற்கு  அமர்த்தப்பட்ட 72 பேர், தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட  வேண்டும் எனக் கோரி, பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மாதத்தில் 28 நாட்கள் கடமையாற்றினால், 7,000 ரூபாயும்  மாதத்தில் 30 நாட்கள் கடமையாற்றினால்,  7,500 ரூபாயும் தங்களுக்குச்  சம்பளமாக வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை (17),  மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் முன்பாக நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

"கடவைக் காப்பாளர்கள் கடமைக்குத் திரும்பினர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty