கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபருக்கு 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்
21-04-2017 04:58 PM
Comments - 0       Views - 7

-எம்.இஸட்.ஷாஜஹான்

கசிப்பு தயாரித்ததாக குற்றம் காணப்பட்ட  நபர் ஒருவருக்கு  நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த நேற்று (20) 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

கட்டானை, களுவரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த அச்சில மதுசங்க என்ற சந்தேக நபருக்கு இந்த தண்டம் விதிக்கப்பட்டது.

குறித்த நபர், நீர்கொழும்பு, குரணை பகுதியில் உள்ள வீதிக்கருகில் கால்நடை பண்ணை என்ற போர்வையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நீர்கொழும்பு பொலிஸாரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸார் 75 போத்தல் கசிப்பு 7 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போதே நீதவான் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவினை அபராத பணமாக விதித்துள்ளார்.

"கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபருக்கு 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா அபராதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty