2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“பொலிஸாருக்கும் 55 வயதிலேயே ஓய்வூதியம் வழங்க வேண்டும்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பொலிஸ் துறையில் கடமையாற்றுபவர்களுக்கும் 55 வயதிலேயே, சம்பளத்துடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை, பொலிஸ் மா அதிபர் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டாரவளையில் சனிக்கிழமை இடம்பெற்ற பொலிஸ் நிலையங்களின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“பொலிஸ் சேவையில் உள்ளவர்களுக்கு பௌர்ணமி தின விடுமுறை இல்லை. புதுவருடப் பிறப்பு இல்லை. ஏனைய துறைகளில் உள்ளவர்கள் புதுவருட பிறப்பை வீட்டிலிருந்து கொண்டாடுகின்றனர். ஆனால், பொலிஸார் மற்றும் வீதியில் நின்று பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதுவே பொலிஸாரின் நிலைப்பாடு

நேரத்துக்கு உண்ண முடியாது, உறங்க முடியாது. மக்களின் பாதுகாப்பை பிரதானமாகக் கருதியே இவர்கள், பொலிஸ் துறையில் கடமையாற்றி வருகின்றனர்.

பொலிஸ் சேவையை பற்றி, நான் கூறவேண்டியதில்லை. ஏனெனில், 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில், நானும் பொலிஸ் அதிகாரியாக சேவையாற்றியுள்ளேன். பொலிஸாரின் நிலைமையை நன்கு உணர்ந்தவன்.

எனது பாதுகாப்புக்காக 10 பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுவருட பிறப்பன்று, இவர்கள் அனைவரும் எனது வீட்டிலேயே புதுவருட பிறப்பை கொண்டாடினார்கள்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். இந்தத் துறையில் இருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்று மூன்று பொலிஸார் இதன்போது என்னிடம் கூறினர்.

ஏனெனில், 60 வயதுடன் சேவையிலிருந்து ஓய்வுபெறும் பொலிஸார் 5 வருடங்களுக்கு மட்டுமே ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதாகவும் அதன்பின்னர் வேறு வேலையை தேட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுதவதாகவும் அவர்கள் அங்கலாய்த்தனர்.

எந்த விடுமுறைகளையும் எடுக்காது மக்களுக்காக சேவையாற்றி வரும் பொலிஸாருக்கு, இறுதியில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதில்கூட சிக்கல் நிலையையே காணப்படுகின்றது.

எனவே, படைவீரர்கள் எவ்வாறு சம்பளத்துடன் கூடிய ஓய்வூதியத்தை 55 வயதில் பெறுகின்றார்களோ அதேபோன்று, பொலிஸ் துறையில் கடமையாற்றுபவர்களும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என அவர் இதன்போது கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .