2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சைட்டத்தை முன்கொண்டு செல்ல ‘ஐ.​தே.க துணையாக இருக்கும்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் உதவும்” என, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு, அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களுக்குரியது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பது, வைத்தியர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கம் மட்டுமேயாகும். இந்தச் சங்கத்துக்கு, நாட்டின் மருத்துவக் கல்வி தொடர்பில் செயற்பட முடியாது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த அரசாங்கக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு விலை போனது. இவர்கள், இன்று முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கை, அரசியல் இலாபம் கொண்டது.

அரசாங்கத்துக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் இலங்கை மருத்துவ சபைக்கும் தான், இலங்கையின் மருத்துவக் கல்வி தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

இதேவேளை, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாணவர்களைத் தூண்டி வருகிறார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .