2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹுன்னஸ்கிரிய போராட்டத்துக்கு வெற்றி

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, ஹுன்னஸ்கிரிய ஹெயாபார்க் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவந்த தொழிற்சங்க போராட்டத்துக்கு, இலங்கை செங்கொடிச் சங்கத்தின் அயராத முயற்சியினால், வெற்றிக்கிடைத்துள்ளது.

எயாபார்க் தோட்டத் தொழிலாளர்களுக்கு, 25 நாட்கள் வேலை வழங்கப்படும் என, அரச பெருந்தோட்ட யாக்கத்தின் தலைவர் திலக் மஹானாம உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை செங்கொடிச் சங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில்  இன்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உறுதியளிக்கப்பட்டுள்ளது.

25 நாட்கள் வேலையை வழியுறுத்தியும் அரச காணியை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கண்டி, ஹுன்னஸ்கிரிய ஹெயாபார்க் தோட்ட மக்கள், இலங்கை செங்கொடிச் சங்கத்தின் தலையில் கடந்த மாதம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் பல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கண்டி, பன்விலையில் அமைந்துள்ள அரசபெருந்தோட்டக் கூட்டுதாபனத்தின் பிராந்திய அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை அரசபெருந் தோட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் திலக் மஹானாம,

“கண்டி, ஹுன்னஸ்கிரிய ஹெயாபார்க் தோட்ட மக்கள், ஒவ்வொரு மாதமும் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று கோரி, தொழிற்சங்க நடவடிக்​கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களின் பிரச்சினை எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன் நான் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தேன். இதற்கமைவாக, செங்கொடிச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தொழிலாளர்களுக்கு, மாதாந்தம் 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என்பதே, செங்கொடிச் சங்கத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இக்கோரிக்கை நியாயமானதே.

தொழிலாளர்களுக்கு, 20-25 நாட்களாவது வேலை வழங்கப்படாவிட்டால் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்வர்.

இந்நாட்டின் முழுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, 25 நாட்கள் வேலை வழங்குவதென்பது கஷ்டமான விடயம் அல்ல. எனவே, எயாபார்க் தோட்டத் தொழிலாளர்களுக்கு, 25 நாட்கள் வேலை வழங்கப்படுமென இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஹெயாபார்க் தோட்டம், தனியார் மயமாக்கப்படப் போவதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. ஹெயாபார்க் தோட்டம் 1,900 ஏக்கர்களை கொண்டதாகும். அதில் 800 ஏக்கர்களில் மட்டுமே தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. மீதியாக உள்ள 1,100 ஏக்கர் நிலம் காடாகவுள்ளது.
இதனை அரசாங்கத்தின் கீழ், தனியார் நிறுவனங்கள் மூலம் அபிவிருத்தி செய்யவே பிரதமர் பணித்துள்ளார். இதன்மூலம் பெறப்படும் இலாபத்தின் ஒருப் பகுதி, அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேனகா கந்தசாமி,

“கலந்துரையாடலின் மூலம், ஹெயாபார்க் தோட்ட மக்களின் 25 நாட்கள்  வேலைப்  பிரச்சினைக்குத்  தீர்வு கிடைத்தாக நம்புகின்றோம். தற்போது, தேயிலை கொழுந்து விளைச்சல் கண்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதில் பிரச்சினை இல்லை. எனினும், தேயிலை விளைச்சல் குறையும் காலத்தில், என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதற்காக காடு வளர்ந்துள்ள நிலத்தில், மாற்றுப் பயிர்களை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் சில வாரங்களில், தகுதியான மாற்றுப் பயிர் இனங்காணப்படவுள்ளதுடன் மண் பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .