2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 23 , பி.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்   
“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  

“தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், வவுனியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.   

இதன் போது உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித் சித்தார்த்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ கூட்டமைப்பு தொடர்பில் என்னால், முடிவெடுக்க முடியாது என்றும் என்னுடைய கட்சி சம்பந்தமாகவே முடிவெடுக்க முடிமென்றும் இங்கு உரையாற்றிய ஒருவர் குறிப்பிட்டதில் உண்மை இருக்கின்றது.

இன்றிருக்கின்ற சூழ்நிலையில் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்ற கட்சிகள் முடிவெடுக்கின்ற எல்லா விடயங்களிலும் பங்காளிகள் இருக்கவில்லை. அவ்வாறு பங்காளிகளாக, நாங்கள் பங்குபற்றவில்லை.

இருந்தாலும் எங்களுக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது.  இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றுகொண்டிருக்கிறன. ஏன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அல்லது எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X