2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கையில் OPPO F3 Plus விற்பனை ஆரம்பம்

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

OPPO, தனது புதிய OPPO F3 Plus விற்பனையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. புதிய F3 Plusஇல் வர்த்தக நாமத்தின் முதலாவது dual selfie தெரிவு அடங்கியுள்ளதுடன், 120 பாகை பரந்தளவு லென்ஸைக் கொண்ட Group Selfie க்கான கமராவையும் கொண்டுள்ளது. இந்த அலைபேசியை OPPO ஒன்லைன் ஸ்ரோர்களிலும், இலங்கையின் சகல விற்பனை நிலையங்களிலும் ரூ. 69,990 க்கு கொள்வனவு செய்யலாம்.  

Selfie எடுக்கும் கலையின் மேம்படுத்தப்பட்ட அம்சமான Group Selfieஐக் கொண்ட OPPO F3 Plus இலங்கையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. முன்கூட்டிய பதிவுகள் மார்ச் 24 முதல் 31ஆம் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. விற்பனை அறிமுக நிகழ்வில், முன்கூட்டியே பதிவுகளை மேற்கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தமது சாதனங்களுடன் நம்ப முடியாத பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன.  

OPPO ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் சவு கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை பிரதான சந்தையாக அமைந்துள்ளதுடன், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் OPPO தனது பிரசன்னத்தை விஸ்தரித்த வண்ணமுள்ளது. எமது புதிய Selfie Expert அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் முதலாவது dual Selfie கமராவைக் கொண்ட F3 Plus அலைபேசியின் முதலாவது விற்பனையை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். நுகர்வோருக்கு புதிய வழங்கல்கள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களை ஒரு படி மேல்நோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. முன்னைய தயாரிப்புகளைப் போன்று புதிய Selfie Expertk புகழ்பெற்றதாக அமைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.  

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தியுஸ் பங்குபற்றலுடன், ஜா-எல K-Zone இல் முதலாவது விற்பனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இவர் தனது selfie அனுபவத்தை அங்கிருந்தவர்களுடன் பகிர்ந்திருந்ததுடன், நிகழ்வின் முதல் கட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது கையொப்பங்களையும் இட்டிருந்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .