2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Uniforeஇன் ஏக விநியோகஸ்தராக Brantel நியமனம்

Gavitha   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

Brantel Lanka (Pvt) Ltd, இலங்கையில், சீனாவின் IP மற்றும் analogue கண்காணிப்பு (Surveillance) உபகரண தயாரிப்பாளர்களான Unifore நிறுவனத்தின், ஏக விநியோகஸ்தராக நியமிக்கப்பட்ட பின்னர், CCTV கமெராக்களை விநியோகித்து பொருத்தும் பணிகளிலும் அதன் சேவைகளைப் பன்முகப்படுத்தியுள்ளது.  

E-tel வகை அலைபேசிகளின் உரிமையாளர்கள் என்ற வகையில் இலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் Brantel, இந்நியமனம் மூலம் தொழில் நிறுவனங்கள் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வீட்டுப்பாவனைக்கென Unifore இன் முழு அளவிலான HD Camera, AHD Camera, IP Camera, POE Camera, HD DVR, IP NVR CCTV, AHD DVR, NVR, POE NVR என்பவற்றை இரண்டு வருடகால உத்தரவாதத்துடன் வழங்கி வருகிறது.  

களனியில் Hela Clothing நிறுவனம் மற்றும் கென்யாவில் நைரோபி உட்பட இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு வணிக நிறுவனங்களுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் CCTV கண்காணிப்பு கமெராக்களை ஏற்கனவே விநியோகித்து பொருத்தியும் உள்ளது.  

இந்த புதிய வணிக முறைக்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்து வருவது குறித்து தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவதாக Brantel Lanka (Pvt) Ltd இன் வணிக மேம்பாட்டுத் தலைவர் தாரிக் மகீன் தெரிவித்தார். Unifore நிறுவனத்துடன் இணைந்து உலக CCTV உற்பத்திகளின் அளவுப் பிரமாணங்கள், தரம், செயற்பாட்டு வரையறைகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக கவர்ச்சியான விலையில், E-tel உற்பத்திகளை சந்தைப்படுத்திய அதே உத்தியை பின்பற்றி இதனையும் சாதிப்போம் என்று அவர் மேலும் கூறினார்.Unifore CCTV கமெராக்கள் ஒவ்வொன்றும் ரூ. 4,000 எனும் மிகக் குறைவான விலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. 3M க்கான தேசிய விநியோகஸ்தர்களில் ஒன்றான Brantel உயர் தரத்திலான கேபிள்களை வழங்கி வருவதாக தாரிக் மகீன் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X