2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் பணியகத்துக்கான தனி அலுவலகம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும்  பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் இன்று (24)  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனும்  யுனிசெப் மற்றும் சர்வோதய  நிறுவனங்களின் அமுலாக்கத்துடன் சுமார் 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த அலுவலகம்  அமைக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பெண்கள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தமான முறைப்பாட்டுக்கு வரும் வாகரைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த  சிறுவர்களும் பெண்களும் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜி.வை.ஏ.எஸ்.பியதாஸ தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட கருத்துத் தெரிவிக்கையில், 'தற்போது மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகள்  கிடைப்பது குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும்  பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையில்  7 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.

இது சமூகத்தில் நல்ல மாற்றம். இந்த விடயத்தில் ஒட்டுமொத்தச் சமூகமும் பொறுப்பெடுத்து சமூகச் சீரழிவுகளை ஒழிப்பதில் அக்கறை காட்ட வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .