2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துக்கு சர்வமத குழு ஆதரவு

George   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“பட்டதாரிகளின் பங்களிப்பு எமது நாட்டின் பொருளாதாரத்துககு மிக அவசியமானது என்பதனை உணர்ந்து மிக விரைவில் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தினதும் வடமாகாண சபையினதும் தார்மீக பொறுப்பு” என சர்வமத குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 57 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக சர்வமத குழுவினர், திங்கட்கிழமை (24) பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போதே சர்வமத குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “பட்டதாரிகளின் போராட்டம் நியாயமான போராட்டம். அவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்த வேளையில், அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் எந்தவித சந்தேகமும் எமக்கு இல்லை.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டிது, அரசாங்கத்தினதும், வடமாகாண சபையினதும் தார்மீக பொறுப்பு.

3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகளின் உழைப்பும் பங்களிப்பு தேசிய பொருளாதாரத்துக்கும“, நாட்டுக்கும் இல்லாமை போவதையிட்டு மனவருத்தம் அடைகின்றோம்.

இவர்களின் உழைப்பும் பங்களிப்பும் எமது தேசிய பொருளாதாரத்திற்கு பயன்படாமல் வீண்விரயமாக்கப்படுகின்றது.
இந்த பட்டதாரிகளின் கோரிக்கைகளை அரசாங்கமும், வடமாகாண சபையும் கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் வேலையற்று இருப்பதனால், எமது சமூகத்தில் மிகப்பாரிய பின்னடைவு ஏற்படுகின்றது.

இவர்கள் வேலையற்று இருப்பதனால் திருமணம் மற்றும் ஏனைய வாழ்க்கைப் பிரச்சினைகளும் எழுகின்றன. இதன்போது எமது சனத்தொகையிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

பட்டதாரிகளை உரிய முறையில் திணைக்களங்களிற்குள் உள்வாங்கி, எமது பொருளாதாரத்திற்கும், எமது நாட்டிற்கும் பங்களிப்புச் செய்ய அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும். அத்துடன், வடமாகாண சபையும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் நாமும் கலந்துரையாடுவோம். யாழில் தற்போது இப்பிரச்சினை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம், காணி விடுவிப்பு போன்றனவும் காணப்படுகின்றன.

இது தொடர்பில் அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்களின் வீடுகளில் இராணுவம் இருக்கின்றது. ஆனால் மக்கள் தெருக்களில் இருக்கின்றனர்.

எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி மேற்கொள்ளபடவுள்ள போராட்டத்துக்கு சர்வ மத குழு ஆதரவு வழங்கும்”என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .