2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை பயிற்சி அதிகார சபையின் உடன்படிக்கை கைச்சாத்து

Gavitha   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் கல்விக்கு ஆதரவளித்தல் எனும் ஒராக்கள் உறுதிப்பாட்டினை விஸ்தரிக்கும் வகையிலும், 10,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு IT தொழில் வாய்பை வழங்கும் வகையிலும், நாடு முழுவதுமுள்ள 35 VTA பயிற்சி மையங்களில் ஒராக்கள் அகாடமியின் கல்வித் திட்டங்களை வழங்கும் வகையில் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை (VTA) ஆகியன ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  

அடுத்து வரும் மூன்று வருட ஒப்பந்த காலத்தில் இலங்கையில் ஒராக்கள் அகடமி கல்வித் திட்டங்களுக்கான பயிற்றுவிப்பாளராக உருவாகுவதற்காக 150 அங்கத்தவர்களுக்கு தத்தமது திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட பின்னர் ஒராக்கள் அகடமி அறிவுறைகளைப் பயன்படுத்தி தமது மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி வழங்கப்படும்.  

இந்த உடன்படிக்கையின் கீழ், ஒராக்கள் “train-the-trainer” கற்கையை முன்னெடுப்பதுடன், தரவு கட்டமைப்பு உருவாக்கல், SQL உடன் தரவுத்தள வடிவமைப்பு மற்றும் புரோகிராமிங், Programming with PL/SQL, Java Foundations, Java Fundamentals மற்றும் Java Programming போன்றன அடங்கியுள்ளன. இந்தப் பயற்சியை பூர்த்தி செய்யும் அங்கத்தவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சிகள் மற்றும் ஒராக்கள் கல்வி அகடமி உள்கட்டுமானம் போன்றவற்றை ஏனைய பீட அங்கத்தவர்கள் மற்றும் மாணவர்களை பயிற்றுவிக்க பயன்படுத்த முடியும்.  

கிராமிய இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப தொழில் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி வழங்குனராக VTA திகழ்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .