2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வெப்ப அதிர்ச்சி குறித்து எச்சரிக்கை

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவுகின்ற ஆகக்கூடிய வெப்பம் காரணமாக, ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகையால், பிள்ளைகளை தண்ணீரில் விளையாட விடுமாறும் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.   

வெப்ப அதிர்ச்சி நிலைமையை இல்லாமற்செய்வதற்கு, தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கவும் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுரை கூறியுள்ளார்.  

விசேடமாக, சின்னப் பிள்ளைகளை தண்ணீரில் கூடுதலாக விளையாடவிடவேண்டும், நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் நீராட செய்யவேண்டும் மற்றும் பானங்களை பருகுதவற்கும், பழங்களைப் பானங்களாக்கி பருகவைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  

சூரிய ஒளி அதிகளவில் விழும் இடத்தில், பிள்ளைகள் விளையாடுவதை கட்டுப்படுத்துமாறும், ஆகக் கூடுதலாக வியர்வை சிந்தாமல் இருப்பதற்குப் பார்த்துகொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.   

திரவத்தன்மையான பானங்களைப் பருகும் போது, உடல் வரட்சி ஏற்படும் நிலைமையைத் தவிர்த்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ள வைத்தியர், தற்போதைய சூழ்நிலையில் தோல்நோய் ஏற்படுவது பொதுவானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .