2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மோடியை இ.தொ.கா தனித்தே சந்திக்கும்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி  

“இலங்கைக்கு, மே மாதம் 12ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மலையகத்தின் மூத்த தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துச் சந்திக்கும்” என, காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.  இந்த விவகாரம் தொடர்பில் அவர், மேலும் கூறியதாவது “இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் ஜிங் சந்துவை நேரடியாகச் சந்தித்துக் கோரியுள்ளோம்.  

இ.தொ.கா, மோடியைத் தனித்துச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவதாக அவர், உறுதியளித்தார். எனினும், அந்த சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் இதுவரையிலும் ஒதுக்கப்படவில்லை.   

மலையகத்தில், இந்திய அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்களுக்கு நன்றி கூறும் வகையிலும் அவ்வாறான திட்டங்களை எதிர்காலங்களிலும் அமுல்படுத்தவேண்டுமெனவும் நாம் கோரிக்கை விடுப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .