2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தந்தையின் பதவி பறிப்பு; பதவியைத் துறந்தார் மகன்

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், தம்புள்ளை தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, கண்டி-பாத்ததும்பர தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.  

தம்புள்ளை தொகுதியின் இணை அமைப்பாளர்களாக மத்திய மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.எம்.யசமான்ன மற்றும் தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.ஆர்.தயானந்த சிறி ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

பாத்ததும்புர தொகுதியின் பதிய அமைப்பாளராக பாத்ததும்பர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டபிள்யூ. எம்.சமரஜீவ பண்டார வெலகெதர நியமிக்கப்பட்டுள்ளார்.  

லொஹான் ரத்வத்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சருமான அநுருத்த ரத்வத்தையின் மகன் ஆவார்.  

இதேவேளை, மஹியங்களை தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான மாகாண சபை உறுப்பினர் விதானகம நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.ஜீ.குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று( 25) வழங்கப்பட்டது.  

அதனைத்தவிர, மாவட்ட அமைப்பாளர்கள் 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிஸங்க ஹேரத், அசங்க தொடம்வல, அசேல ஏக்கநாயக்க, லின்டன் விஜேசிங்க ஆகியோர் கண்டி மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

எஸ்.அகிலதாஸ், பீ.கோபால் கிருஷ்ணன் மற்றும் கந்தசாமி கருணாகரன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கும் என்.அருணதிலகன், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நியமிக்கப்பட்டு நியமன கடிதங்கள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், தன்னுடைய தந்தையான ஜனக்க பண்டார தென்னகோனிடமிருந்து, அமைப்பாளர் பதவியை பறித்தமையை அடுத்து, அவருடைய மகனான பிரமித் பண்டார தென்னகோன், மத்திய மாகாண இளைஞர் நடவடிக்கை, கிராமிய அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .