2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கண்டி கூட்டத்துக்கு 41பேர் செல்லார்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 25 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமது குழுவின் மீது எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அக்குழுவைச் சேர்ந்த 41 உறுப்பினர்களும், கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக்கூட்டத்துக்குச் செல்லமாட்டா ர்கள்” என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் எம்.பியுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  

“ஒரு சவாலுக்காகவே, மே தினத்தைக் கொண்டாட காலிமுகத்திடலை ஒன்றிணைந்த எதிரணிக்கு அரசாங்கம் கொடுத்தது. அந்தச் சவாலுக்கு முகம்கொடுத்து இலட்சக்கணக்கான மக்களை, அங்கு கொடுவரவேண்டியது. ஒன்றிணைந்த எதிரணியின் பொறுப்பாகும்.   

எம்மீதான அச்சத்தின் காரணமாகவே, காலிமுகத்திடல் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சவாலை நாங்கள் வெற்றிக்கொள்வோம்.   
கண்டி, கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் நடத்தவுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், மே தினக்கூட்டத்தில் கட்டாயம் பங்குபற்றவேண்டுமென, சகல உறுப்பினர்களுக்கு கட்சியினால், கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பங்கேற்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.  

எனினும், காலிமுகத்திடலில் இடம்பெறும் மேதினக் கூட்டத்துக்குச் செல்வதற்கு நாங்கள் தீர்மானித்தது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீதுள்ள எதிர்ப்பினால் அல்ல என்றும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதற்கான மக்கள் பலத்தை நிரூபிப்பதற்காகவே, அங்கு செல்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .