2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மாயையில் ஐ.இராச்சியம்’

Shanmugan Murugavel   / 2017 ஏப்ரல் 27 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னர், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்களுக்குக் காணப்படும் உரிமைகளைக் கொண்டிருக்காது என்பதை வலியுறுத்த விரும்புவதாக, ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

பிரஸல்ஸில் நாளை இடம்பெறவுள்ள மாநாட்டுக்கு முன்பாக, ஜேர்மனி நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை இன்று  (27) வெளிப்படுத்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மூன்றாவது தரப்பு ஒன்று, அங்கத்துவ நாட்டைப் போன்று அல்லது அதை விட அதிகமான உரிமைகளைக் கொண்டிருக்காது. இது, இலகுவாக விளங்கும் ஒன்று போலத் தோன்றலாம். ஆனால் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக, இது தொடர்பாக, பிரித்தானியாவுக்கு, மாயையான எண்ணங்கள் உள்ளது போன்று காணப்படுகிறது” என்று, சான்செலர் தெரிவித்தார்.

இதேவேளை, துருக்கியின் ஜனாதிபதி தய்யீர் ஏர்டோவான், தனது அதிகாரங்களை அதிகரித்துள்ள நிலையில், துருக்கிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள், பாதிப்படைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

“கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சம்பவங்கள், ஜேர்மன் - துருக்கி தொடர்புகள், அதேபோல் ஐரோப்பா - துருக்கி உறவுகள் ஆகியவற்றை, கடுமையாகப் பாதித்துள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

அத்தோடு, ஜேர்மனியப் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளரொருவரைக் கைதுசெய்யமையைச் சுட்டிக்காட்டிய மேர்க்கெல், அரசியலமைப்புப்படி இயங்கும் நாடொன்றுக்கு, ஏற்புடைய செயற்பாடு அதுவன்று எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .