2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை: எதிர் யோசனை தோற்றது

Thipaan   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை செய்யும் ஏற்றுமதிகளுக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவதை எதிர்த்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை,​ நேற்று (27) தோல்வியடைந்துள்ளது. 

இந்த யோசனைக்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பிலிருந்து 22 உறுப்பினர்கள் விலகியிருந்தனர்.   இந்த யோசனையை, இலங்கை அரசாங்கமானது மிகவும்​ வெற்றிக்கரமானமுறையில் தோல்வியடையச் செய்துள்ளது என, பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  

மனித உரிமைகள் போன்ற முக்கிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதாகவும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயன்முறை போதுமானதாக இல்லை என்றும் அதனால், அந்தச் சலுகையை வழங்குவதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் குறிப்பிட்டே, அந்த யோசனையில் முன்வைக்கப்பட்டது.  

தண்டனை வழங்காமை எனும் பழக்கத்தை இலங்கை இன்னும் சரியாகக் கையாளவில்லை. மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கியுள்ளது என்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

நிறுத்தப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெற இலங்கை மும்முரமாக உள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் (UNHRC) தீர்மானத்தை முழுதாக அமுலாக்க இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அதில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,  

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் இல்லாமற் செய்யப்படவில்லை. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் சர்வதேச சமவாயங்கள் தொடர்பாக இலங்கையில் குறைபாடு உள்ளது என்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

751 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில், 376 வாக்குகளை பெற்றால் குறித்த யோசனை நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட யோசனை மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோதே, அது தோல்வியடைந்தது.  

இந்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்திருந்தால் ஜீ.எஸ்.பீ பிளஸ் சலுகை, இலங்கைக்குக் கிடைக்காமல் போயிருக்கும்.  

ஜீ.எஸ்.பீ பிளஸ், இலங்கைக்கு கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்து வெளிநாட்டு செலவாணியின் கையிருப்பும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X